இலங்கை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்தியதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்துக்கான தவணையை செலுத்த வேண்டிய இறுதித் திகதி இன்றாக இருக்கும் நிலையில், இலங்கை நேற்று கடனை திருப்பிச் செலுத்தியுள்ளது.
இலங்கையின் நற்பெயரை தொடர்ந்தும் நிலைநிறுத்தும் முகமாக, உரிய தினத்துக்கு முன்னரே கடனை திருப்பிச் செலுத்தியதாக அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
மதிப்பீட்டு நடவடிக்கைகள் மற்றும் ஆய்வு அறிக்கைகளைப் பார்த்து பீதியடைந்து, பெரும் தள்ளுபடியில் விற்பனை செய்த பிணை முதலீட்டாளர்கள் கவலைப்பட வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.