July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு மேலும் 16 இலட்சம் தடுப்பூசிகளை சீனா நன்கொடையாக வழங்கியது

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள மேலும் 16 இலட்சம் ‘சீனோபார்ம்’ தடுப்பூசிகளின் முதற்கட்டத் தொகுதி இன்று காலை இலங்கையை வந்தடைந்தது.

பீஜிங் நகரில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் இன்று காலை 8 மணியளவில் தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மற்றுமொரு விமானத்தில் அடுத்தத் தொகுதி தடுப்பூசிகள் இன்றைய தினத்தில் நாட்டை வந்தடையவுள்ளன.

சீனாவினால் ஒரே தடவையில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட அதிகளவான சினோபார்ம் தடுப்பூசி தொகை இதுவாகும்.

இதன்படி இதுவரையில் சீனாவினால் 27 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.