January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட தாதியை தாக்கிய பிக்கு கைது!

(Photo : facebook /Anamaduwa Base Hospital)

பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொண்ட தாதி ஒருவரை பிக்கு ஒருவர் கண்ணாடி பாத்திரம் மூலம் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனமடுவ ஆதார மருத்துவமனையின் கொவிட் பிரிவில் கடமையில் இருந்த தாதி ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

ஆனமடுவ  குமாரகம விகாரையின் பிக்கு ஒருவர் காய்ச்சல் மற்றும் வேறு நோய் நிலைமை காரணமாக ஆனமடுவ  ஆதார மருத்துவமனையின் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

குறித்த தாதி பிக்குவுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ள நிலையில், இதன் போது ஏற்பட்ட வலி காரணமாக கோபமடைந்த அவர் கண்ணாடி பாத்திரம் ஒன்றில் தாதியை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த தாதி சம்பவ இடத்திலேயே கிழே விழுந்துள்ளார். சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவருக்கு அதே மருத்துவமனையின் முதன்மை பராமரிப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

பின்னர் காயமடைந்த தாதி  மேலதிக சிகிச்சைக்காக  குருனாகல் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தாக்குதலை நடத்திய பிக்கு  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.