July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொவிட் -19 தொற்றுக்குள்ளாகும் சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிஜ்வே மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.

கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலைக்கு தினசரி ஐந்துக்கும் மேற்பட்ட கொவிட் தொற்றுக்குள்ளான சிறுவர்கள் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, கொவிட் நோய்த் தொற்றுடன் தினமும் எட்டு முதல் பத்து தாய்மார்கள் லேடி ரிஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும் டாக்டர் விஜேசூரிய கூறினார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு நாளில் ஒரு குழந்தை மட்டுமே கொவிட் -19 தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட சூழ்நிலையில், அது தற்போது ஐந்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனி்டையே, இலங்கையில் முதல் முறையாக 11 வயது சிறுவனுக்கு “டெல்டா“ வைரஸ் தொற்று உறுதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.