
File Photo
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த பேச்சுவாரத்தை நடைபெற்றது.
இதில் சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது தம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி சாதாகமான பதிலை வழங்கியதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சி உறுப்பினருக்கு இடையூறுகள் இன்றி செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய சூழலை உருவாக்குதல், தேர்தல் முறையில் மாற்றம் செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியதாகவும் இதற்கு ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.