January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு மாகாண புதிய பிரதம செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

வடக்கு மாகாண பிரதமர் செயலாளராக நியமனம் பெற்றுள்ள சமன் பந்துலசேன, கைதடியில் உள்ள தனது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

இன்று முற்பகல் 11.40 மணியளவில் அவர் தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய பந்துலசேன, ஜனாதிபதியினால் வடக்கு மாகாண பிரதம செயலாளராக கடந்த வாரத்தில் நியமிக்கப்பட்டார்.

இதன்படி யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதமர் செயலாளர் அலுவலகத்தில் இன்று இவரின் கடமை பொறுப்பேற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் அவரின் குடும்பத்தினரும் கலந்துகொண்டிருந்தனர்.

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் வடக்கு மாகாணத்திற்கு பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டமைக்கு வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

https://youtu.be/Z5mzoE7Ovg4