January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரபல நடிகை உபேக்‌ஷா சுவர்ணமாலி கைது!

வீதி விபத்து தொடர்பில் நடிகையும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உபேக்‌ஷா சுவர்ணமாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி கட்டுகஸ்தோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

கண்டி – நுகவெல வீதியில், நுகவெல  பிரதேச செயலகத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மீது உபேக்‌ஷா பயணித்த வாகனம் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியுள்ளது.

இதனையடுத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த 18 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட உபேக்‌ஷா சுவர்ணமாலி இன்று பிற்பகல் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது.

இவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.