இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 18 லீட்டர் (9.6 கிலோ) சமையல் எரிவாயு சிலிண்டருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜுலை 25 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நுகர்வோர் விவகார அதிகார சபை இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய 18 லிட்டர் அல்லது 9.6 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை 1259 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இந்த விலைகள் மாற்றப்பட்டுள்ளன. இதன்படி கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிகபட்ச சில்லறை விலை 1,150 ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் 1,158 ரூபாவாகவும், காலி, இரத்தினபுரி மாவட்டத்தில் ரூ .1,181 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதேவேளை யாழ். மாவட்டத்திற்கு 1,259 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் மற்றைய மாவட்டங்களுக்கும் கொழும்பில் இருந்து தூரத்தை அடிப்படையாகக் கொண்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த வர்த்தமானி அறிவிப்புக்கு அமைய எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படாத நிலையங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
மாவட்ட ரீதியில் விலைப் பட்டியல்