May 4, 2025 19:07:34

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சாதாரண தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது!

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி பரீட்சை 2022 பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் மார்ச் 3 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று நிலைமை காரணமாக எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடக்க வேண்டிய பரீட்சையை எதிர்வரும் ஜனாவரி மாதத்திற்கு ஒத்தி வைப்பதற்கு ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், பாடசாலைகளை ஆரம்பிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பரீட்சையை பெப்ரவரி மாதம் வரையில் ஒத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த வருடத்திற்கான க.பொ.த உயர்தரம் மற்றும் 5 ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைகளை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடத்துவதற்கு கடந்த வாரத்தில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.