July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதிபர், ஆசிரியர்களின் கோரிக்கைகள் அமைச்சரவைக்கு

தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிபர், ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தள்ளார்.

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள ஆசிரியர் சங்கங்கள் கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றன.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் எனவும், அது வரையில் ஆசிரியர்கள் இணையம் ஊடான கற்பித்தலில் ஈடுபட மாட்டார்கள் என்றும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரம் இன்று நடக்கவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டு அங்கு அது தொடர்பிலான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தள்ளார்.