July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேலும் ஒரு தொகுதி பைசர் தடுப்பூசிகள் இலங்கை வந்தன!

அமெரிக்காவில் இருந்து மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் இந்த தடுப்பூசிகள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறாக 90,000 டோஸ் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இவை பாதுகாப்பாக அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் கடந்த வாரங்களில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட டோஸ் ‘பைசர்’ தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.