இலங்கையில் முதல் முறையாக கொவிட் -19 வைரஸின் மாறுபாடான “டெல்டா” வைரஸால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பேருவளை சுகாதார பிரிவுக்கு உட்பட்ட கிரிகல்கொட பகுதியைச் சேரந்த 11 வயது மாணவர் ஒருவரே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக களுத்துறை சுகாதார பிரிவின் பொது சுகாதார பரிசோதகர் ஆர்.ஜி. சிங்னபாஹு தெரிவித்தார்.
இதனிடையே இலங்கையில் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசெல குணவர்தன தெரிவித்திருந்தார்.
டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளான அதிகமானோர் கொழும்பு மாநகர சபை எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.