நாடு மிகப் பெரிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.தேசப்பற்றை விற்றது அரசாங்கம் மட்டும் அல்ல,தேசப்பற்றுக்கு முன்னால் வாக்கு வழங்கி ஏமாற்றமடைந்த நாட்டு மக்களும் இந்த நிலைமைக்கு காரணம் என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மங்கள சமரவீர இன்று “உண்மையான தேசபக்தர்”என்ற புதிய அமைப்பை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து பேசிய அவர்;
‘தாராளமய ஜனநாயகத்திற்காக செயற்பட விரும்புவோர் அனைவரும் இந்த முயற்சியில் இணையலாம் என்று அழைப்பு விடுத்த மங்கள சமரவீர,நாடு மிகப் பெரிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.தேசப்பற்றை விற்றது அரசாங்கம் மட்டும் அல்ல,தேசப்பற்றுக்கு முன்னால் வாக்கு வழங்கி ஏமாற்றமடைந்த நாட்டு மக்களும் இந்த நிலைமைக்கு காரணம் என்றும் தெரிவித்தார்.
நாட்டின் ஆட்சியில் பங்கு பற்றிய நானும் இதற்கு பதில் சொல்ல வேண்டியவன்.30 ஆண்டுகளுக்கு அதிகமாக அரசியலில் ஈடுபட்டுள்ளேன்.
அரசாங்கத்தினால் ஏற்பட்ட பிழைகளை பல தடவைகள் சுட்டிக் காட்டியுள்ளேன்.பல தடவைகள் அமைதியாக இருந்துள்ளேன்.
நாட்டை தற்போதைய நிலையிலிருந்து மீட்டெடுக்க தேசப்பற்றை புரிந்து கொண்டு தேசப்பற்றுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.