அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைகளுக்கு பொறுத்தமான தீர்வு எதிர்வரும் நாட்களில் கிடைக்கும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி. பெரேரா தெரிவித்துள்ளார்.
ஹொரனை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சம்பள பிரச்சினை உட்பட பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்து, இணையவழி கற்பித்தலில் இருந்து ஒதுங்கிக்கொண்டுள்ளனர்.
கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தியும் தீர்வு கிடைக்காததால், பணி பகிஷ்கரிப்பு தொடர்கிறது.
இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் தீர்வு கிடைக்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், ஆசிரியர்கள் பணி பகிஷ்கரிப்பை முடித்துக்கொண்டு, கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.