May 14, 2025 7:00:27

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் வெலிக்கடை படுகொலையின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு!

வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கதுரை ஆகியோரின் 38 ஆவது நினைவேந்தல் இன்று (25) நடைபெற்றது.

இந்த நிகழ்வானது, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன் போது உயிரிழந்தவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா, செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் கனகேந்திராசா ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

 

This slideshow requires JavaScript.