இலங்கையின் தென்மேற்கு பருவ மழை காரணமாக, பல பகுதிகளில் 60 கி.மீ வேகத்தில் (40-50) பலத்த காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப் போது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும் வடக்கு, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.