
இலங்கையின் வட மாகாணத்தில் 72 நாட்களின் பின்னர் நாளை புகையிரத சேவையொன்று மீண்டும் ஆரம்பமாகிறது.
கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்ட புகையிரத சேவையே இவ்வாறு ஆரம்பமாகிறது.
காங்கேசன்துறை முதல் வவுனியா வரையான புகையிரத சேவை நாளை ஆரம்பமாகிறது.
நாளை முதல் தினசரி காங்கேசன்துறையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புகையிரதம் வவுனியா நோக்கி புறப்படும் என்றும் மாலை 5 மணிக்கு மீண்டும் காங்கேசன்துறைக்கு வந்தடையும் என்றும் இலங்கை புகையிரத சேவைகள் தெரிவித்துள்ளது.