
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் 82 ஆவது அகவை தினத்தை முன்னிட்டு அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வு இன்று (25) நடைபெற்றது.
பழைய பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தொண்டமானின் உருவச் சிலைக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அத்துடன் இ.தொ.கா.வின் தலைமையகமான சௌமிய பவனிலும் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் உருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஸ்வரன், பிரதமரின் பெருந் தோட்டங்களுக்கான இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.