February 28, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இராஜேந்திரம் ராஜமகேந்திரனின் மறைவுக்கு இந்திய தூதரகம் அனுதாபம்

கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் ஆர். ராஜமகேந்திரனின் மறைவுக்கு இந்திய தூதரகம் அனுதாபம் தெரிவித்துள்ளது.

தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த ராஜமகேந்திரன் இன்று காலமானார்.

அவரது மறைவு தொடர்பாக இந்திய தூதரகம் டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

“கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் திரு. இராஜேந்திரம் ராஜமகேந்திரன் அவர்களின் மறைவுக்கு உயர் ஸ்தானிகராலயம் தனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது. அவரது ஆன்மாவுக்கு எமது மரியாதைகளை காணிக்கையாக்கும் அதேவேளை, அவருக்கும் எமக்கும் இடையிலான நீண்ட பிணைப்பினையும் அன்புடன் நினைவுகூர்கிறோம்”

என்று இந்திய தூதரகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.