January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மலையக சிறுமியின் மரணம் தொடர்பில் 30 பேரது வாக்குமூலம் பெறப்பட்டது’: பொலிஸ்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்துகொண்டிருந்த சிறுமியின் மரணம் தொடர்பாக இதுவரையில் 30 பேரது வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரிஷாட் பதியுதீனின் வீட்டுக்கு பணிப்பெண்ணாக சிறுமியைக் கொண்டுவந்த தரகரின் வங்கிக் கணக்குகளை ஆராய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளம் குறிப்பிட்டுள்ளார்.

அகரபத்தானை பிரதேசத்தில் உள்ள வங்கிக் கணக்கொன்றுக்கு பணம் பரிமாறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இன்னுமொரு பெண்ணை 2015- 2019 இடைப்பட்ட காலத்தில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

டயகம சிறுமியின் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.