January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் ஒரே நாளில் நான்கு இலட்சம் பேருக்கு கொவிட் -19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்ட நாளாக நேற்றைய தினம் (24) பதிவாகியுள்ளது.

இன்று (25) வெளியாகியுள்ள தொற்று நோயியல் பிரிவின் புள்ளி விவரங்கள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதன்படி, கொவிட் -19 க்கு எதிராக நேற்று (24) மாத்திரம் 412,111 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

306,622 டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் முதல் டோஸாக செலுத்தப்பட்டுள்ள அதேவேளை, 35,720 டோஸ் இரண்டாவது டோஸாகவும் நேற்று மாத்திரம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவிடமிருந்து நன்கொடையாக சமீபத்தில் இலங்கைக்கு கிடைத்திருந் மொடர்னா தடுப்பூசி 69,830 பேருக்கு முதல் டோஸாக செலுத்தப்பட்டிருக்கிறது.