May 28, 2025 14:46:11

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சிறுவர்கள்,பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்போம்’; கொட்டகலையில் போராட்டம்

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (25) முன்னெடுக்கப்பட்டது.

மலையக பெண்கள் குழுக்களின் ஒன்றிணைவுடன் ‘ப்ரொடெக்ட் சங்கம்’ சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பியவாறு குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அத்தோடு, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து தீக்காயங்களுடன் மரணமடைந்த சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டும் எனவும் போராட்டகாரர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

மேலும் நாடு முழுவதும் உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். அவர்கள் பணி செய்யும் பகுதிகளில பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். குறிப்பாக ஹிஷாலினியின் மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட்ட வேண்டும்.

மேலும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துகின்ற தரகர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்’ என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.