July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு சீனாவிடமிருந்து மேலும் 1.6 மில்லியன் தடுப்பூகள் நன்கொடை!

இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் “சினோபார்ம்” தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்படும் என்று கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த தடுப்பூசி தொகுதி நாளை (26) காலை நாட்டை வந்தடையும் என தூதரகம் தெரிவித்துள்ளது.

தொற்று நோயியல் பிரிவு இன்று (25) காலை வெளியிட்டுள்ள அறிக்கைபடி, நாட்டில் 8,907,559 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு டோஸ் பெற்றவர்களின் எண்ணிக்கை 7,114,807ஆகவும், இரண்டு டோஸையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 1,793,472 ஆகவும் உள்ளது.

 

 

“ஸ்புட்னிக் வி” தடுப்பூசியின் முதல் டோஸ் 159,081 பேருக்கும், 2வது டோஸ் 14,464 பேருக்கும் வழங்கப்பட்டது.

அத்தோடு“பைசர்” தடுப்பூசியின் முதல் டோஸ் 126,058 பேருக்கும், “மொடர்னா” தடுப்பூசியின் முதல் டோஸ் 563,368 பேருக்கும் வழங்கப்பட்டது.

“அஸ்ட்ரா செனெகா” தடுப்பூசியின் முதல் டோஸ் 925,242 பேருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், 2 வது டோஸ் 385,885 பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.ஏனையவர்களுக்கு 2 வது தடுப்பூசி வழங்குவதில் தொடர்ந்தும் சிக்கல் நிலவுகின்றது.