இலங்கையில் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் கொரோனா நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளான அதிகமானோர் கொழும்பு மாநகர சபை எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், இலங்கையில் ஒக்சிஜனில் தங்கியிருக்க வேண்டிய கொரோனா நோயாளர்கள் அதிகரித்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.