January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் ஒரு மாத காலத்திற்குள் பிரதான வைரஸ் பரவலாக ‘டெல்டா’ மாறும் அபாயம்’

ஒரு மாத காலத்திற்குள் பிரதான வைரஸ் பரவலாக டெல்டா வைரஸ் மாறும் அபாயமுள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகளில் தற்போது டெல்டா வைரஸ் பரவி வருவதை அடிப்படையாகக் கொண்டு இதனை கூற முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி திட்டத்தில் திருப்தி அடைந்தாலும், தடுப்பூசியை முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதில் தொடர்ந்தும் சிக்கல் காணப்படுகிறது.

ஒவ்வொரு தடுப்பூசி வகையையும் மாகாண மட்டத்தில் வழங்குவதற்கு பதிலாக, அதன் செயற்றிறனுக்கமைவாகவும் அதிகபட்ச வயதை கருத்திற் கொண்டும் உலக நாடுகள் கடைப்பிடிக்கும் நடைமுறைகளுக்கமைவாக வழங்குவதே உசிதமானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்க நேரிடும் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

நாட்டில் டெல்டா பரவி வரும் நிலையில்,மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் அறிவுறுத்தியுள்ளார்.