இலங்கையில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்கும் போது வெளி நோயாளர் பிரிவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
இருப்பினும், வைத்தியசாலைகளில் இனங்காணப்படும் கொரோனா நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வைத்தியசாலைகளில் தாதியர்களினால் முன்னர் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதும் தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளின் பின்னர் அது நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் வைத்தியர்கள் தற்போதும் மருத்துவமனைகளில் குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அடையாளம் காணப்படும் கொரோனா நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.