January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிகிச்சைகளின் பின்னர் ரிஷாட் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்!

உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மீளவும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

கடந்த 17 ஆம் திகதி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைகளின் பின்னர்  இன்று (24) மீண்டும் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் பணம் செலுத்தும் வார்டில் தம்மை சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கோரியிருந்தார்.

எனினும் அவர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதால், குற்றப் புலனாய்வு திணைக்களம்அதை மறுத்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.