இலங்கையில் எரிபொருள் விலை குறைப்புக்கு எந்த சாத்தியப்பாடும் இல்லை என்றும் இப்போதுள்ள நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பைத் தவிர மாற்று வழிகள் இல்லை என்றும் வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையை குறைப்பதற்கான மாற்றுவழி என்னவென்பது குறித்தோ அதற்கான வேலைத்திட்டம் குறித்தோ தனக்கு தெரியவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை குறைப்பு தொடர்பாக அரசாங்கத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘எரிபொருள் விலை ஏன் குறைக்கப்படவில்லை?’ என்பதை ‘எரிபொருள் விலையைக் குறைப்போம்’ என்று வாக்குறுதி அளித்தவர்களிடமே கேட்க வேண்டும் என்று கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை குறைப்புக்கான மாற்று வழிகளை முன்மொழிய எரிபொருள் விலையை அதிகரித்ததாகக் கூறி, நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்த எதிர்கட்சியும் தவறியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.