இலங்கை பொருளாதார நெருக்கடி நிலையைச் சந்தித்துள்ளதால், ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பொன்றை வழங்குவது சாத்தியமில்லை என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை தான் 100 வீதம் ஏற்றுக்கொள்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு உட்பட நலன்புரி நடவடிக்கைகளைச் செய்வதானால், மேலதிகமாக வரி விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மேலதிக வரி விதிப்புகளைச் செய்தால், பொதுமக்களே பாதிக்கப்படுவார்கள் என்றும் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.