January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு

யாழ்ப்பாணம், அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இன்று அதிகாலை 1.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உழவு இயந்திரத்தில் பயணித்த மூவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டயர் பகுதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையால் உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி, குடைசாய்ந்துள்ளது.

உழவு இயந்திரத்தை கடமையில் இருந்த பொலிஸார் மறித்த போது, நிறுத்தாது சென்றதன் காரணமாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

This slideshow requires JavaScript.