May 25, 2025 11:51:44

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Update- ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

Update: இஷாலினியின் மரணம்

ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இஷாலினியின் மரணம்; ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்

மலையக சிறுமி இஷாலினியின் மரணத்தைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை, மனைவியின் சகோதரன் மற்றும் தரகர் இவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களை பொலிஸார் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி எரி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவத்துடனேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.