July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசாங்கம் நாளாந்த பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளது’: சமன் ரத்னப்பிரிய குற்றச்சாட்டு

இலங்கையில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அரசாங்கம் குறைத்துள்ளதாக தேசிய தொழிற்சங்க முன்னணியின் தலைவர் சமன் ரத்னப்பிரிய குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது, நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகள் 50 வீதமாக குறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிசிஆர் பரிசோதனைகள் குறைவடைந்ததால், பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் தேசிய தொழிற்சங்க முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் குறைவாக அடையாளம் காணப்படுவதைக் கொண்டு திருப்தியடைய முடியாது என்றும் சமூகத்தில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் இருக்க முடியும் என்றும் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதத்தில் நாளாந்தம் 23 ஆயிரம் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தற்போது 12 ஆயிரம் பரிசோதனைகளே மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.