இலங்கையில் புதிய டெல்டா வைரஸ் கட்டுப்பாட்டை மீறி பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
நாட்டில் அனைத்து கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளிலும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றின் புதிய டெல்டா வைரஸ் கட்டுப்பாட்டை இழந்து பரவுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட சுகாதார அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனைகளில் ஒக்சிஜன் தட்டுப்பாட்டு ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அடையாள காணப்பட்டுள்ள பகுதிகளையும் தாண்டி டெல்டா வைரஸ் பரவியுள்ளதாக சுகாதாரத்துறை கவலை வெளியிட்டுள்ளது.
வீரியத் தன்மையுடன் பரவும் டெல்டா வைரஸைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.