இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான செயற்பாடுகளை இலங்கையில் முன்னெடுக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சமகால அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பில் நிகழ்நிலை முறைமை ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசியல்,பொருளாதாரம் மற்றும் அண்டைய நாடு என்ற ரீதியில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நெருங்கிய உறவு காணப்படுகிறது.இந்த நிலையில் இந்தியாவை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. ஒன்றிணைந்து தான் செயற்பட வேண்டும். அத்துடன் அனைத்து நாடுகளுடனும் நடபுறவுடன் செயற்பட வேண்டும்.
சீனா அனைத்து நாடுகளுக்கும் உதவி செய்யாது.இலங்கை பொருளாதாரத்தில் எதிர்பார்க்கத்தக்க வகையில் முன்னேற்றம் அடைந்தால் தான் சீனா இலங்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும்.தற்போதைய சூழ்நிலையில் சீனாவை தவிர பிறிதொரு நாடுகள் இலங்கைக்கு உதவி செய்யாது.
ஏனெனில்,இலங்கை அரசாங்கம் வெளிவிவகார கொள்கையினை பிற தரப்பினருக்கு ஏற்றாற்போல் மலினப்படுத்தியுள்ளது எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.