இந்தியா வசம் இருக்கும் இலங்கையின் எண்ணெய் குதங்களில் 24 குதங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள இந்தியாவுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம் என வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
நாட்டில் தற்போது மக்களின் பயன்பாட்டிற்கு தேவையான எரிபொருள் தாராளமாக உள்ளதாகவும், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இலங்கையில் உள்ள எரிபொருள் களஞ்சிய நிலையங்களில் முழுமையாக எரிபொருளை நிரப்பினாலும், ஒரு மாதத்திற்கான எரிபொருளையே சேமிக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு புதிதாக எண்ணெய் குதங்கள் அவசியமாகின்றதாகவும் திருகோணமலை குதங்களில் 24 குதங்களை பெற்றுக்கொள்ள இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் இது குறித்து நீண்ட காலமாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டாலும், சாதகமான பதில் கிடைக்கவில்லை என்று அமைச்சர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இலங்கையில் குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கான எண்ணெய்யை களஞ்சியப்படுத்தும் வசதிகளை உருவாக்கிக்கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.