
சம்பள முரன்பாடுகளை உடனடியாக தீர்க்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கத்தினரால் ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான குறித்த பேரணி அங்கிருந்து மணிக்கூட்டு சந்தியை அடைந்து மீண்டும் பழைய பேருந்து நிலையப்பகுதியை அடைந்தது.
ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான அதிபர், ஆசிரியர்கள் கலந்துகொண்டு தமது கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர்.
இதன்போது ஆசிரியர்களின் சம்பள முரன்பாடுகளை தீர்ப்பதாக அரசாங்கம் சொல்லிக் கொண்டாலும் அதனை தீர்ப்பதற்கான எந்தவித நடவடிக்கையினையும் இதுவரை முன்னெடுக்கவில்லை எனவும் இதனால் எமது வாழ்க்கைச் செலவு மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் கல்விக்கு 6 வீதம் நிதி ஒதுக்கீட்டை வழங்குமாறும், கல்வியினை தனியார் மயப்படுத்துவதை நிறுத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.