November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘டெல்டா வைரஸின் அபாயத்திற்கு ஏற்ப தடுப்பு நடவடிக்கைகள் சீர்செய்யப்பட வேண்டும்’: சுகாதாரத்துறை

டெல்டா வைரஸ் பரவலின் அபாயத்திற்கு ஏற்ப, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளும் சீர்செய்யப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பிசிஆர் பரிசோதனைகள், அறிகுறிகளுக்கு முன்னதான கட்ட தனிமைப்படுத்தல், மரபணு கண்காணிப்பு உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் சீர்செய்யப்பட வேண்டும் என்று சீனாவில் வெளியான ஆய்வொன்று குறிப்பிடுவதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

சாதாரண கொரோனா தொற்றுக்கு உள்ளானவரைவிட, உருமாறிய டெல்டா வைரஸின் வீரியம் 1000 மடங்கு அதிகமாக காணப்படுவதாக அவர் எச்சரித்துள்ளார்.

டெல்டா தொற்று சமூகத்தினுள் பரவுவதற்கு முன்னர் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறையினரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வீரியத்துடன் பரவக்கூடிய தன்மை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இலங்கையில் டெல்டா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், அதன் வீரியத்தன்மைக்கு ஏற்ப சீர்செய்யப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.