இலங்கையில் இன்று முதல் ஆரம்பமாகும் வார இறுதி நீண்ட விடுமுறையில் 10 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாகாண எல்லைகளில் மேலதிக பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
இதன்போது, பயணக் கட்டுப்பாடுகளை மீறி பயணிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மேல் மாகாணத்திற்குள் முகக்கவசம் அணியாமல் நடமாடுபவர்கள் தொடர்பில் 3 விசேட பொலிஸ் குழுக்கள் ஊடாக சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.