February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி கோட்டாபய- மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹீம் மொஹமட் சந்திப்பு

இலங்கைக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹீம் மொஹமட் சாலிஹ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவைச் சந்தித்துள்ளார்.

இருவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் கொரோனா தொற்றின் சவால்கள், தடுப்பூசி ஏற்றம் போன்ற விடயங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இம்மாதம் முதல் மாலைத்தீவு மீண்டும் சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை ஆரம்பித்ததாகவும், 7 இலட்சத்துக்கு மேற்பட்ட பயணிகள் மாலைத்தீவுக்கு வருகை தந்துள்ளதாகவும் அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ள முடிந்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.