May 13, 2025 19:33:39

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கறுப்பு ஜுலை: யாழ். மாநகர சபையில் அஞ்சலி

கறுப்பு ஜுலை கலவரத்தின் நினைவு நாளான இன்று யாழ்ப்பாணம் மாநகர சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் பிரதி முதல்வர் ரி.ஈசன் உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

மேசைகளில் பூக்களை வைத்து விளக்கேற்றி அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.