February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். கோப்பாயில் பொலிஸ் சுற்றிவளைப்பு: 9 பேர் கைது!

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாலை 2 மணி தொடக்கம் காலை 6 மணி வரையில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகேயின் வழிகாட்டலிலும் அவரது பங்கேற்புடனும் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கண்காணிப்பில் இந்த சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கைது செய்யப்பபட்ட 9 பேரில் அண்மையில் யாழ்ப்பாணம் பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏனைய 6 பேரும் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.