July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வீட்டுப் பணியாளர் தொழிலுக்கான வயதெல்லையை அதிகரிக்க யோசனை!

இலங்கையில் வீட்டுப் பணியாளராக இணைத்துக்கொள்வோரின் ஆகக் குறைந்த வயதெல்லையை 18 ஆக அதிகரிப்பதற்கு ஆராய்ந்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன்படி இன்னும் இரண்டு மாதங்களில் அது தொடர்பான சட்டத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

1956/47 ஆம் இலக்க சட்டத்திற்கமை 14 வயதுக்கு மேற்பட்டவர்களை தொழில்களில் அமர்த்த முடியும் என்று சட்டம் காணப்பட்ட நிலையில். அந்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு 2021 ஜனவரி 18 ஆம் திகதி முதல் அந்த வயதெல்லை 16 ஆக அதிகரிக்கப்பட்டது.

இதன்படி 16 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களை தொழில்களில் ஈடுபடுத்த முடியும் என்றாலும் அவர்களை ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்த முடியாது. இதற்கமைய வீட்டுப் பணியாளர் தொழில் ஆபத்தானது இல்லை என்பதனால் அவர்களை அந்தப் பணிகளில் ஈடுபடுத்த முடியும்.

இதனால் இது தொடர்பாக சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு வீட்டுப் பணியாளராக இணைத்துக்கொள்வோரின் வயதெல்லையை 18 ஆக அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.