
File Photo
22 வயதுடைய பணிப்பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பணிபுரிந்து வந்த குறித்தப் பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
16 வயது சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளின் போது, குறித்த வீட்டில் இதற்கு முன்னர் பணிபுரிந்த 22 வயதுடைய யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் ரிஷாட் பதியுதீனின் மனைவின் சகோதரரான 44 வயதுடைய மதவாச்சி பிரதேசத்தை சேர்ந்த நபரை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.
16 வயதுடைய சிறுமியை அந்த வீட்டுக்கு பணிப் பெண்ணாக அழைத்துச் சென்ற அதே தரகரே அதற்கு முன்னர் 22 வயது யுவதியை அங்கு அழைத்துச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.