Photo: Facebook/ Pushpazoysa
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்துப் பிரிவு விடுதிக்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்ததால் அங்கு ஊழியர்கள் மற்றும் நோயாளர்களிடையே பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக வைத்தியசாலையின் தலைமைத் தாதி புஷ்பா ரம்யானி டி சொய்சா தெரிவித்துள்ளார்.
திடீரென குறித்த பம்பு விடுதிக்குள் நுழைந்த நிலையில், அதனைக் கண்ட பாதுகாப்பு அதிகாரிகள் அதனை பிடிக்க பெரும் முயற்சி எடுத்துள்ளனர்.
பின்னர் கடும் முயற்சிகளின் பின்னர் அந்தப் பாம்மைப் பிடித்து போத்தல் ஒன்றுக்குள் அடைத்ததாக புஷ்பா ரம்யானி டி சொய்சா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வனவிலங்குகளை பொறுப்பேற்கும் நிறுவனங்களுக்கு அறிவித்த போதும், யாரும் வராத காரணத்தினால் தாங்களாகவே தூரப் பிரதேசத்தில் உள்ள காடொன்றில் அதனை விட்டுவந்ததாக வைத்தியசாலையின் தலைமைத் தாதி புஷ்பா ரம்யானி டி சொய்சா கூறியுள்ளார்.
இந்த வைத்தியசாலைக்குள் நாய், பூனைகள் உள்ளிட்ட பல விலங்குகள் வந்துள்ள போதும், நாகப்பாம்பு உள்ளே வந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.