பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த 16 வயது சிறுமி தொடர்பிலான விசாரணைகளை மேற்பார்வை செய்ய சட்டமா அதிபரினால் சட்டத்தரணிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் (மேலதிக மன்றாடியர் நாயகம்) திலீப பீரிஸ் தலைமையில் இந்தக் குழுவை சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் நியமித்துள்ளார்.
டயகம சிறுமியின் மரணம் தொடர்பில் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, இதுவரை இடம்பெற்ற விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்தே, சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய அரச தரப்பில் சட்டத்தரணிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.