January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணத்துக்கான புதிய இந்திய துணைத்தூதுவராக ராகேஷ் நடராஜ் நியமனம்

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதுவராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், இந்திய வெளியுறவு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதுவராக இருந்த பாலச்சந்திரன், சுரினாம் குடியரசு நாட்டுக்கும் அதனோடு இணைந்து மூன்று நாடுகளுக்குமான இந்தியத் தூதுவராக பொறுப்பேற்கவுள்ளார்.

இந்நிலையிலேயே யாழ்ப்பாணத்திற்கான துணைத்தூதுவராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், கண்டியிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றிவரும் நிலையில் விரைவில் யாழ்ப்பாணத்தில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.