January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

5 இலட்சம் விரைவான கொவிட் பரிசோதனை கருவிகள் அமெரிக்காவினால் இலங்கைக்கு நன்கொடை!

கொவிட் -19 க்கு எதிரான இலங்கையின் போராட்டத்தில் இலங்கைக்கு உதவும் அமெரிக்காவின் ஒத்துழைப்புக்களின் ஒரு கட்டமா கொரோனா தொற்றை கண்டறியும் 500,000 சோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை மதிப்பில் 300 மில்லியன் ரூபாய் (1.5 மில்லியன் அமெரிக்க டொலர்) மதிப்புள்ள இந்த சோதனை கருவிகள் ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் மேம்பாட்டுக் குழு, யு.எஸ். சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தின் (யு.எஸ்.ஏ.ஐ.டி) மூலம் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்டன.

இந்த ஆன்டிஜென்-கருவிகள் கொரோனா தொற்றை விரைவாகவும் துள்ளியமாகவும் கண்டறிவதுடன், கூடுதல் உபகரணங்கள் அல்லது சிறப்பு ஆய்வக பரிசோதனைகள் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

தொற்று நோய்களின் தொடக்கத்திலிருந்தே அமெரிக்கா இலங்கைக்கு 8 மில்லியனுக்கும் அதிகமான செலவில் அவசரகால பொருட்கள் மற்றும் முக்கியமான சேவைகளை வழங்கியது.

மேலும் 200 வென்டிலேட்டர்கள் மற்றும் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மொடர்னா தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.