January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் அணிதிரண்ட ஆசிரியர்கள்: ஜனாதிபதி செயலகம் நோக்கி பேரணி!

கொழும்பில் அணிதிரண்டுள்ள அதிபர், ஆசிரியர்கள் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தி வருகின்றனர்.

கோட்டை ரயில் நிலையத்தில் முன்னால் இன்று காலை ஒன்று கூடிய ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தோர், அங்கிருந்து ஜனாதிபதி செயலகம் நோக்கி பேரணியை நடத்தப்படுகின்றது.

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தப் பேரணி காரணமாக கொழும்பில் பல வீதிகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.