January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் இரு தடவைகள் தடுப்பூசி செலுத்தப்பட்டதால் பெண்ணொருவர் பாதிப்பு

கண்டியில் தவறுதலாக பெண்ணொருவருக்கு ஒரு சில மணி நேரங்களுக்குள் இரண்டு தடவைகள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறிய நேர இடைவெளிக்குள் இரண்டு தடவை தடுப்பூசியை செலுத்திக் கொண்டதால் அந்த பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டதுடன்,மயக்கமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உடனடியாக குறித்த பெண்மணிக்கு முதலுதவி வழங்கிய பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்த்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனக்கு இரண்டு தடவை தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அவர் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவரது கணவர் இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.