January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிழக்கில் இந்தியாவின் முதலீடுகள் தொடர்பில் இந்திய பதில் உயர்ஸ்தானிகர்-இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பேச்சு

கிழக்கு மாகாணத்தில் இந்திய முதலீடுகளுக்கான வாய்ப்புகள் மற்றும் பிராந்தியத்தின் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படக் கூடிய கூட்டு முயற்சிகள் குறித்து இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் இந்திய பதில் உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சுமார் ஒரு மணித்தியாலம் நடைபெற்ற இந்த சந்திப்பில், இராஜாங்க அமைச்சின் செயலாளர் அமல் ஹர்ஷ டி சில்வா, பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அபிவிருத்தி ஒத்துழைப்பு பிரிவின் தலைமை அதிகாரி எல்டோஸ் மத்தியூ புண்ணூஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

கிழக்கு மாகாணத்தில் இந்திய முதலீடுகளுக்கான வாய்ப்புகள் மற்றும் பிராந்தியத்தின் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படக்கூடிய கூட்டு முயற்சிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இரு தரப்பினரிடையிலும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இந்திய-இலங்கை அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்குடமை குறித்த நோக்குகள் தொடர்பாகவும் இரு தரப்பினரும் தமது கருத்துகளை பரிமாறியுள்ளனர்.